சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று சமூகவலைதள பதிவில் வெளியிட்டுள்ள பதிவு:அனுமதியின்றி 2 துப்பாக்கிகள் வைத்திருந்ததாக அரக்கோணம் கவுன்சிலர் பாபு உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. இந்நிலையில், அரக்கோணம் பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண், தான் காவல்துறையால் மிரட்டப்படுவதாக நேற்றும் கண்ணீருடன் ஒரு காணொலி வெளியிட்டுள்ளார். சர்வ சாதரணமாக ஆட்டோமேட்டிக் துப்பாக்கிகள் தமிழகத்தில் புழக்கத்திற்கு வந்துவிட்டது. நான் கேட்கிறேன் – கவுன்சிலர் கையில் நவீன துப்பாக்கி எப்படி வந்தது. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
அரக்கோணம் கவுன்சிலரிடம் எப்படி துப்பாக்கி வந்தது?எடப்பாடி கேள்வி
0
previous post