சென்னை: வழக்கறிஞருக்கு சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை அதிகாரி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக எம்.பி. வில்சன் தெரிவித்துள்ளார். தமது கட்சிக்காரருக்கு வழக்கறிஞர் அளித்த ஆலோசனைக்காக அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. தொழில்முறை செயல்களில் வழக்கறிஞர்களுக்கு கிடைக்கும் பாதுகாப்பை எதிர்க்கும் நடவடிக்கை; EDயால் விடுவிக்கப்பட்ட நீதிபதிகளுக்கும் சம்மன் அனுப்பப் போகிறார்களா? அமலாக்கத்துறை என்பது சட்டத்தைவிட உயர்ந்தது அல்ல. குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கு சம்மன் அனுப்பப் போகிறார்களா? வழக்கறிஞருக்கு சம்மன் அனுப்பியது ஒரு சர்வாதிகார ஆட்சியின் அடையாளம்; ஜனநாயகத்தின் அடையாளம் அல்ல என்றும் கூறினார்.