கெய்ரோ: வடஆப்பிரிக்க நாடான கிழக்கு சூடானில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள பல்வேறு அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இந்நிலையில் தொடர் கனமழையால் கிழக்கு சூடானில் உள்ள அர்பாத் அணை அதன் முழு கொள்ளளவை எட்டியது.
இதையடுத்து அணைக்கரையோரம் வசித்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வௌியேற்றப்பட்டனர். தொடர்ந்து அர்பாத் அணை உடைந்து ஏற்பட்ட வௌ்ளப்பெருக்கில் சிக்கி 4 பேர் உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏராளமானோர் மாயமாகி விட்டதாகவும், அவர்களை தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.