டெல்லி: கிழக்கு டெல்லியில் உள்ள கல்யாணபுரி பகுதியில் 1000கிலோ பட்டாசை போலீசார் கைப்பற்றினர். டெல்லியில் பட்டாசுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில் சட்டவிரோதமாக வைத்திருந்த பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டது. வெடிபொருள் சட்டத்தின் கீழ் பட்டாசு வியாபாரியை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.