காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் கோட்ட அலுவலகத்தில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் இன்று நடைபெறுகிறது என்று மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார். ஸ்ரீபெரும்புதூர் மின்வாரிய செயற்பொறியாளர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், செங்கல்பட்டு மின் பகிர்மான வட்டம், ஸ்ரீபெரும்புதூர் வட்டம் மாதாந்திர மின் நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மின்வாரிய செயற்பொறியாளர் தலைமையில் இன்று காலை 10.30 மணிக்கு ஸ்ரீபெரும்புதூர் கோட்ட அலுவலகத்தில் நடைபெறுகிறது. அதன்படி பிரதி மாதந்தோறும் 3வது புதன் கிழமைகளில் மேற்கொண்ட அலுவலகத்தில் நடைபெறும் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்கள் கலந்துகொண்டு, தங்களின் மின் தொடர்பான சந்தேகங்கள் மற்றும் குறைகளை தெரிவித்து நிவாரணங்களை பெற்றுக்கொள்ளலாம். தெரிவித்துள்ளார்.