டெல்லி: மரண வாக்குமூலங்களை பதிவு செய்யும் போது நீதிபதிகளின் செயல்பாடுகளை சந்தேகிக்க முடியாது என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. திருவண்ணாமலையை சேர்ந்த ரமேஷ் என்பவரின் மனைவி அளித்த மரண வாக்குமூலத்திற்கு எதிரான வழக்கில், கணவரான ரமேஷ் தீ வைத்து தன்னை எரித்து விட்டதாக ஜோதி மரண வாக்குமூலம் அளித்து இருந்தார். இந்த வழக்கு விசாரணையில், 95% காயம் அடைந்திருந்த நிலையில், எப்படி ஜோதியால் சரியாக வாக்குமூலம் கொடுத்திருக்க முடியும்? என்ற ரமேஷின் கேள்விக்கு மரண வாக்குமூலத்தை பதிவு செய்த நீதிபதியின் செயல்பாட்டை சந்தேகிக்க முடியாது என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.