பெங்களூரு: பிரசித்திபெற்ற தசரா விழாவையொட்டி மைசூருவில் விழாக்கோலம் பூண்டுள்ளது. 750 கிலோ எடை கொண்ட தங்க அம்பாரியில் சாமூண்டீஸ்வரி அம்மன் எழுந்தருளினார். தங்க அம்பாரியை சுமந்து கொண்டு 14 யானைகள் ஊர்வலம் சென்றன. அபிமன்யூ என்ற யானை தலைமையில் 14 யானைகள் ஊர்வலம் சென்றன. முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் பங்கேற்றுள்ளனர்.