டெல்லி: தசராவிழா கொண்டாட்டங்கள் நிறைவடைந்த நிலையில் டெல்லியில் காற்று மாசு அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு காற்றின் தரம் மோசமாக உள்ளதாக கூறப்படுகிறது. பல்வேறு இடங்களில் அனுமதியின்றி பட்டாசுகள் வெடித்ததே இதற்கு காரணம் என்றும் தவகல் வெளியாகியுள்ளது. டெல்லியில் சில இடங்களில் பல இடங்களில் லேசான பனியுடன் புகைமூட்டமாகவுள்ளது.
குருகிராம் உள்ளிட்ட பகுதிகளில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளது. புகஒ போக்கும் வாகனம் கொண்டு சீர்செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளபட்டுள்ளது. காற்றின் மாசுபாடு காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழக்கை பாதிக்கபட்டுள்ளது. அதிகாலையில் நடைபயிற்சிக்கு செல்பவர்கள் கடுமையாக பாதிக்கபட்டுள்ளனர். இருமல் மற்றும் தொண்டை எரிச்சல் ஏற்படுவதாக கூறுகின்றனர்.