சென்னை: நடிகர் ரஜினிகாந்த் திரைப்பட படப்பிடிப்புக்காக, நேற்று காலை சென்னையில் இருந்து விசாகப்பட்டினம் புறப்பட்டு சென்றார். விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டி: அமைச்சர் துரைமுருகன் கூறியது பற்றி கேட்கிறீர்கள். மதிப்புக்குரிய துரைமுருகன், எனது நீண்ட கால நண்பர். அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவர் என்ன சொன்னாலும், எனக்கு வருத்தம் எதுவும் கிடையாது. நமது நட்பு எப்போதுமே தொடரும் என்றார்.
* நகைச்சுவையை பகைச்சுவை ஆக்க வேண்டாம்: – துரைமுருகன்
ரஜினி கூறியது குறித்து, காட்பாடியில் நேற்று அமைச்சர் துரைமுருகனிடம் நிருபர்கள் கேட்டதற்கு, ‘‘எங்களது நகைச்சுவையை யாரும் பகைச்சுவையாக பயன்படுத்த வேண்டாம். நாங்கள் எப்போதும் போல் நண்பர்களாகவே இருப்போம்’’ என்றார்.