பெங்களூரு: துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரில் (4 நாள்), ஏ – பி அணிகள் மோதும் முதல் போட்டி பெங்களூரு எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று காலை 9.30க்கு தொடங்குகிறது. இந்திய அணி அடுத்தடுத்து முக்கியமான டெஸ்ட் தொடர்களில் விளையாட உள்ள நிலையில், அதற்கு முன்னோட்டமாக நடைபெற உள்ள இந்த தொடரில் முன்னணி வீரர்கள் ஏ, பி, சி, டி என நான்கு அணிகளாகப் பிரிக்கப்பட்டு பலப்பரீட்சையில் இறங்குகின்றனர். ஏ அணிக்கு ஷுப்மன் கில், பி அணிக்கு அபிமன்யு ஈஸ்வரன், சி அணிக்கு ருதுராஜ் கெய்க்வாட், டி அணிக்கு ஷ்ரேயாஸ் அய்யர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஏ-பி அணிகள் மோதும் போட்டி பெங்களூருவில் இன்று தொடங்கும் நிலையில், சி-டி அணிகளிடையேயான போட்டி அனந்தபூரில் தொடங்குகிறது. அடுத்த கட்ட லீக் ஆட்டங்கள் அனைத்தும் அனந்தபூரிலேயே நடக்க உள்ளன (செப். 12-15 மற்றும் செப். 19-22).
ஏ அணி: ஷுப்மன் கில் (கேப்டன்), மயங்க் அகர்வால், கே.எல்.ராகுல், குல்தீப் யாதவ், ஆவேஷ் கான், ஷிவம் துபே, பிரசித் கிருஷ்ணா, கலீல் அகமது, ஷுப்மன் கில், ரியான் பராக், தனுஷ்கோடியன், வித்வத் கவெரப்பா, திலக் வர்மா, ஷாஷ்வத் ராவத், துருவ் ஜுரெல், ஆகாஷ் தீப், குமார் குஷக்ரா.
பி அணி: அபிமன்யு ஈஸ்வரன் (கேப்டன்), சர்பராஸ் கான், நவ்தீப் சைனி, வாஷிங்டன் சுந்தர், முகேஷ் குமார், ரிஷப் பன்ட், சாய் கிஷோர், நாராயண் ஜெகதீசன், ராகுல் சாஹர், யாஷஸ்வி ஜெய்ஸ்வால், யஷ் தயாள், நிதிஷ் குமார் ரெட்டி, மோகித் அவஸ்தி, முஷீர் கான்.
சி அணி: ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), பாபா இந்திரஜித், கவுரவ் யாதவ், சந்தீப் வாரியர், விஜய்குமார் வைஷாக், ரஜத் பத்திதார், மயங்க் மார்கண்டே, ஆர்யன் ஜுயல், சாய் சுதர்சன், ஹ்ரிதிக் ஷோகீன், மானவ் சுதர், அன்ஷுல் காம்போஜ், அபிஷேக் போரெல், ஹிமான்ஷு சவுகான்.
டி அணி: ஷ்ரேயாஸ் அய்யர் (கேப்டன்), கர் பாரத், அக்சர் படேல், சவுரவ் குமார், ரிக்கி புய், இஷான் கிஷண், சரண்ஷ் ஜெயின், துஷார் தேஷ்பாண்டே, ஆகாஷ் சென்குப்தா, தேவ்தத் படிக்கல், அதர்வா டெய்ட், ஆதித்யா தாக்கரே, அர்ஷ்தீப் சிங், யஷ் துபே, ஹர்ஷித் ராணா.