கோவை: உரிய காரணத்துடன் விண்ணப்பிக்கும் காவலர்களுக்கு உடனே விடுப்பு வழங்க வேண்டும் என்று டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். மதுரையில் காவல்துறை உயர் அதிகாரிகள் உடனான ஆலோசனை கூட்டத்தில் டிஜிபி சங்கர் ஜிவால் அறிவுறுத்தினார். பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு உணவு, குடிநீர் போன்ற வசதி இருப்பதை உறுதிப்படுத்தவேண்டும். காவலர்களுக்கு மனஅழுத்தம் போக்கும் புத்துணர்வு நிகழ்ச்சிகளை அவ்வப்போது நடத்த வேண்டும். மனஅழுத்தத்தை அனுதாபத்துடன் அணுக வேண்டும் என டிஜிபி சங்கர் ஜிவால் அறிவுறுத்தியிருக்கிறார்.