சென்னை: ஈ.சி.ஆரில் உள்ள பிரபல பொழுதுபோக்கு பூங்காவில் ராட்சத ராட்டினம் பாதியில் நின்றதால் 30க்கும் மேற்பட்டோர் தவித்து வருகின்றனர். தொழில்நுட்பக் கோளாறால் அந்தரத்தில் ராட்டினம் நின்றதால் 30க்கும் மேற்பட்டோர் இறங்க முடியாமல் தவித்து வருகின்றனர். செங்குத்தாக மேலே சென்று கீழே இறங்கும் வகையில் ராட்சத ராட்டினம் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இரவு 7.05 மணியளவில் 30க்கும் மேற்பட்டோர் சென்ற ராட்டினம் திடீரென அந்தரத்தில் நின்றதால் பரபரப்பு நிலவி வருகிறது. ராட்டினத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறை சரி செய்யும் பணியில் பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்டவுடன் ராட்டினத்தில் சிக்கியவர்கள் மீட்கப்படுவர் என தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை விஜிபி பொழுதுபோக்கு பூங்காவில் ராட்டினத்தின் இயந்திரக் கோளாறால் மக்கள் தவிப்பு
0