துபாய்: துபாய் ஓபன் மகளிர் டென்னிஸ் தொடரில் இன்று நடக்கும் முதலாவது காலிறுதியில் ரஷியாவின் மிர்ரா ஆண்ட்ரீவா, 2ம் நிலை வீராங்கனையும், 5 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றவருமான இகா ஸ்வியாடெக்குடன் பலப்பரீட்சை நடத்துகிறார். 2வது காலிறுதியில் டென்மார்க்கின் கிளாரா டெளசன் செக் குடியரசை சேர்ந்த லிண்டா நோஸ்கோவாவுடன் மோதுகிறார்.
இரவு 8 மணிக்கு நடக்கும் 3வது காலிறுதியில் அமெரிக்காவின் சோபியா அன்னா, 7வது ரேங்கிங்கில் உள்ள கஜகஸ்தானின் எலீனா ரைபகினாவுடன் பலப்பரீட்சை நடத்துகிறார். இதுபோல் மகளிர் ஒற்றையர் பிரிவில் 3வது சுற்றில், செக்குடியரசின் கரோலினா முச்சோவா 6-3, 1-6, 7-5 என அமெரிக்காவின் மெக்கார்ட்னி கெஸ்லரை வீழ்த்தினார். அவர் இரவு 9.10 மணிக்கு நடக்கும் கடைசி காலிறுதியில் ருமேனியாவின் சொரானா மிஹேலாவுடன் மோதுகிறார்.