சென்னை: லயோலா கல்லூரியின் மேனாள் டீன், முனைவர் சா.வின்சென்ட், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மன்றத்தின் உறுப்பினர் செயலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் தமிழ்நாடு அரசின் சிறந்த விஞ்ஞானி பட்டத்தை பெற்றுள்ளார். 2002ல் இவர் மேற்கொண்ட மழை நீர் வடிகால் வாய்க்காலை பற்றிய ஆராய்ச்சிகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.