பம்மல்: பீகாரை சேர்ந்தவர் சுமித் குமார் (22), கடந்த சில ஆண்டுகளாக பம்மல், நாகல்கேணி, காதர் பாஷா தெருவில் தனது பெற்றோருடன் தங்கி, கூலி வேலை செய்து வந்தார். கடந்த சில தினங்களாக சுமித் குமார் சரிவர வேலைக்குச் செல்லாமல், குடித்து விட்டு வந்து வீட்டில் தகராறு செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார். நேற்றும் அதுபோலவே குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த சுமித் குமார் சற்று நேரத்தில் மயங்கி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் அவரது மூக்கில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து உடனடியாக சங்கர் நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது விரைந்து வந்த போலீசார் சுமித்குமார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், வழக்குப் பதிவு செய்து தவறி விழுந்து உயிரிழந்தாரா அல்லது வேறு யாரேனும் தள்ளி விட்டதில் இறந்தாரா என்ற பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.