பொள்ளாச்சி: பொள்ளாச்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து சிவகாசி நோக்கி அரசு பஸ் நேற்று புறப்பட்டது. பஸ்ஸை டிரைவர் அருள் மூர்த்தி போதையில் ஓட்டியதாக கூறப்படுகிறது. அந்த பஸ்ஸில் சுமார் 30க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். உடுமலை ரோடு கோமங்கலம் புதூர் வழியாக தேசிய நெடுஞ்சாலையில் பஸ் சென்று கொண்டிருக்கும்போது, டிரைவர் அருள் மூர்த்தி மது போதையில் இருக்கையிலேயே தள்ளாடினார். மேலும், பஸ்சை இயக்கியபடியே புகையிலைப் பொருளை கையில் எடுத்து அதனை நசுக்கியபடி வாயில் வைத்தார்.
அதன்பிறகு பஸ்சை சரியாக இயக்க முடியாமல் திணறியதால் பஸ் தாறுமாறாக செல்ல ஆரம்பித்தது. பஸ்சில் இருந்த பயணிகள் உயிர் பயத்தில் கூச்சலிட்டனர். உஷாரான டிரைவர் அருள் மூர்த்தி பஸ்சை பஸ் நிறுத்திவிட்டு டிரைவர் இருக்கையிலேயே சாய்ந்து படுத்தார். பஸ்சிலிருந்து பயணிகள் அனைவரும் கீழே இறங்கினர். இதுதொடர்பாக டிரைவர் அருள் மூர்த்தி மீது கோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.