செங்கல்பட்டு: அடுக்குமாடி குடியிருப்பு மொட்டை மாடியில் மூட்டை மூட்டையாக பதுக்கி வைத்திருந்த 114 கிலோ போதை பொருட்களை செங்கல்பட்டு நகர போலீசார் அதிரடி பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். தமிழகம் முழுவதும் போதை பொருட்களை கட்டுபடுத்த தமிழக அரசும் காவல்துறையினரும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே அண்ணாசாலை பகுதியில் வீட்டில் சட்ட விரோதமாக ஏராளமான போதை பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்.பிரனீத் ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் செங்கல்பட்டு நகர காவல் நிலைய உதவி ஆய்வாளர் செல்வகணேஷ் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்க்கு நேரில் சென்று அதிரடியாக ஆய்வு செய்தனர்.
அப்போது அண்ணாசாலை பகுதியில் உள்ள அடுக்கு மாடி கட்டிடம் மூன்றாவது தளத்தின் மேல் உள்ள மொட்டை மாடியில் மூட்டை மூட்டையாக பதுக்கி வைத்திருந்த பான் மசாலா மற்றும் குட்கா ஆகிய பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து, 11 மூட்டை எடை கொண்ட 114 கிலோ போதை பொருட்களை பறிமுதல் செய்த செங்கல்பட்டு நகர போலீசார் காவல் நிலையத்திற்க்கு கொண்டு வந்தனர். இதனை தொடர்ந்து போதை பொருட்களை பதுக்கி வைத்திருந்தது யார் என பல்வேறு கோணங்களில் போலீசார் ரகசியமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த பகுதியில் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் வீடு வாடகை எடுத்து போதை பொருட்களை விற்பனை செய்து வருவதாக கூறப்படுகின்றது. இந்த ஆய்வின் போது உதவி ஆய்வாளர் கார்த்திகேயன், தனிப்பிரிவு காவலர் பச்சமுத்து, காவலர் ஏகாம்பரம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.