சென்னை: போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் கைதான நடிகர் ஸ்ரீகாந்த் தொடர்பாக காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், நடிகர் ஸ்ரீகாந்த் உரிய மருத்துவ பரிசோதனைக்குப் பின் ஆதாரங்களுடன் கைது செய்யப்பட்டார். அதிமுக நிர்வாகி பிரசாத் கடந்த 3 ஆண்டாக போதைப்பொருள் விற்பனை செய்துள்ளார். போதைப்பொருள் தொடர்பான இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மேலும் பலர் கைது செய்யப்படுவர். அதிமுக நிர்வாகி பிரசாத், அஜய் வாண்டையார், கூட்டாளிகள் இணைந்து மோசடியில் ஈடுபட்டுள்ளனர். பிரசாத்துக்கு பிரதீப், கானா நாட்டை சேர்ந்த ஜான் கொக்கைன் விற்றுள்ளனர். கொக்கைன் விற்றது தொடர்பான பணப் பரிவர்த்தனை, ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டன.பிரசாத், அஜய் வாண்டையார் உள்ளிட்டோர் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் தொடர்பான இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மேலும் பலர் கைது செய்யப்படுவர்: கைதான நடிகர் ஸ்ரீகாந்த் தொடர்பாக காவல்துறை அறிக்கை
0