சென்னை: போதைப்பொருள் மற்றும் ஆயுதக் கடத்தல் வழக்கில் மேலும் ஒருவரை என்ஐஏ அதிகாரிகள் சென்னையில் கைது செய்துள்ளனர். தற்போது கைது செய்யப்பட்ட லிங்கம், வழக்கில் ஏற்கனவே கைதான குணசேகரனின் நெருங்கிய கூட்டாளி ஆவார். போதைப்பொருள், ஆயுத கடத்தல் வழக்கில் இலங்கையைச் சேர்ந்த 10 பேர் உட்பட 13 பேர் மீது ஏற்கனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.