சென்னை: போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. எஃப்.ஐ.ஆரில் முதல் எதிரியாக பிரதீப் குமார், 2வது எதிரியாக ஜான் சேர்க்கப்பட்டுள்ளனர். தடை செய்யப்பட்ட போதைப்பொருளை தொடர்ந்து பயன்படுத்தியதுடன் வைத்திருந்த குற்றத்துக்காகவும், வணிகரீதியான அளவுக்கு உட்பட்டு போதைப்பொருள் கையில் வைத்திருப்பது தொடர்பான பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், குற்றச் செயலில் பங்கு பெறுபவர் என்ற போதைப்பொருள் தடுப்புச் சட்டப் பிரிவிலும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம்: நடிகர் ஸ்ரீகாந்த் மீது என்னென்ன பிரிவுகளில் வழக்கு
0