திருப்பூர்: சென்னை பெருங்களத்தூர் பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து (42). இவர் திருப்பூர் அவினாசியில் உள்ள சலூன் கடையில் முடிதிருத்தும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். நேற்று குடிபோதையில் திருப்பூர் ரயில் நிலையத்திற்கு வந்தார். அப்போது பாலக்காட்டில் இருந்து ஈரோட்டுக்கு செல்லும் ரயில் வந்தது. பயணிகள் ஏறி இறங்கியதும் ரயில் புறப்பட்டது. அப்போது மாரிமுத்து திடீரென எழுந்து ஓடும் ரயிலில் ஏற முயன்றார். போதையில் இருந்ததால் நிலை தடுமாறிய அவர் நடை மேம்பாலத்துக்கும் தண்டவாளத்துக்கும் இடையே விழுந்தார். இதில், அவரது 2 கால்களும் துண்டானது. அவரை போலீசார் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.