மதுரை: போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் உள்ள வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது. விசாரணை நீதிமன்றம், அதிகாரி ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக புகார் கூறிய மனுவை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்தது. ஒவ்வொரு பொது அலுவலகமும் உறுதி, நம்பிக்கையின் அடிப்படையில் செயல்படுகிறது. நீதிமன்றமும் அதற்கு விதிவிலக்கு அல்ல என்று உயர்நீதிமன்ற கிளை நீதிபதி இளங்கோவன் தெரிவித்தார்.