சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் போதைப் பொருட்களான மெத்தபெட்டமின் வைத்திருந்த ஒரு பெண் உள்பட 6 பேர் அயல்நாட்டு கைதுப்பாக்கியோடு கைது செய்யப்பட்டுள்ளனர் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. பல்வேறு நாடுகளில் தடைசெய்யப்பட்ட போதைப்பொருள். தமிழகத்தில் மட்டும் மிகவும் எளிதாக கிடைப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. எனவே, தமிழக அரசு இனி மேலும் தாமதிக்காமல் உடனடியாக போதைப் பொருட்களை விற்பவர்களை கைது செய்து இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
போதைப்பொருள் விற்பவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
0