சென்னை: தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் அங்கையா (47). இவர், கடந்த 2003ம் வருடம் போலீஸ் பணியில் சேர்ந்து, தற்போது சென்னை வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில், சட்டம் ஒழுங்கு பிரிவில் காவலராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி கலா என்ற மனைவியும், 7 வயதில் மகளும் உள்ளனர். இவர்கள் குடும்பத்துடன் வண்ணாரப்பேட்டை தங்க சாலையில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வந்தனர்.காவலர் அங்கையா மது பழக்கத்திற்கு அடிமையாகி, சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனால், தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அங்கையா போதையில் நேற்று முன்தினம் இரவு வீட்டின் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வண்ணாரப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
மது போதைக்கு அடிமையான காவலர் தற்கொலை
0