புதுடெல்லி: பாகிஸ்தானில் இருந்து பஞ்சாப் மாநில எல்லை வழியாக போதைப்பொருள்கள் கடத்தப்படுவது வாடிக்கயைாக நீடிக்கிறது. பஞ்சாப் காவல்துறை கடந்த ஆண்டு போதைப்பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்த ஏழு பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து போதைப்பொருள் தயாரிக்க பயன்படும் மருந்து பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் அல்லது இடைத்தரகர்கள் என கூறப்படும் இரண்டுபேரை கைது செய்து, வழக்கு பதிவு செய்தனர். இந்த போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கை அமலாக்கத்துறையும் விசாரித்து வருகிறது.
இந்நிலையில் இதுதொடர்பாக பஞ்சாப், உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், இமாச்சலபிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் உள்ள 15க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இந்த மாநிலங்களில் உள்ள சில மருந்து நிறுவனங்கள் மற்றும் தனி நபர்களுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனைகளின்போது ஏதேனும் ஆவணங்கள் அல்லது பணம் பறிமுதல் செய்யப்பட்டதா என்பகு குறித்த விவரங்கள் வௌியாகவில்லை