கோவை: கோவை விமான நிலையத்தில் மகாராஷ்டிரா கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: ஜவுளி துறைக்கு அதிகமான உதவிகளை மாநில அரசு செய்தால் தான் இந்த தொழில் காலத்தை கடந்து நிற்கும். உலகம் முழுவதும் ஜவுளி தொழில் வளர்ந்து வருகிறது. வங்கதேசத்தில் இருந்து வியட்நாம் வரை இன்றைக்கு ஜவுளி தொழில் பிரமாண்டமாக இருந்து வருகிறது.
பர்மாவில் கூட ஜவுளி தொழிலுக்கு புதிய எழுச்சி ஏற்பட்டுள்ளது. நம்முடைய பகுதியை விட்டு ஜவுளி தொழில் வேறு நாட்டிற்கு, வேறு மாநிலத்திற்கோ சென்று விடக்கூடாது என்று நினைத்தால் மாநில அரசு ஜவுளி துறை சேர்ந்த அத்தனை பேரையும் அழைத்து அவர்களது குறைகளை முழுமையாக கேட்டு உரிய உதவிகளை செய்ய வேண்டும்.
போதை ஒழிப்பு நிச்சயமாக வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. கஞ்சா மற்றும் இதர போதை வஸ்துகளை ஒழிக்க முதல்வர் எடுக்கின்ற அத்தனை முயற்சிகளையும் நான் வரவேற்கிறேன். அனைவரும் வரவேற்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.