கோவை: தூத்துக்குடி மாவட்டம் பெரியதாழை அருகே சுமார் 20 அடி உயர குட்டையான பனை மரத்தை தேர்வு செய்து, முன்கூட்டியே மிகவும் பாதுகாப்பாக பலமான கயிறுகளால் உருவாக்கப்பட்டிருந்த ஏணிப்படிக்கட்டுகளில் விறு விறுவென ஏறி, ஏற்கனவே தயாராக வைக்கப்பட்ட ‘கள்’ளை இறக்கி, அங்கேயே ‘கள்’ குடித்து, போராட்ட ஷூட்டிங்கை சீமான் வெற்றிகரமாக முடித்திருக்கிறார். ‘கள்’ மற்றும் சாராயம் போன்ற போதைப்பொருட்களில் கலப்படம் உள்ளிட்ட பல தவறுகள் நடப்பதால் பல உயிரிழப்புகள் ஏற்படும் என்பதால்தான் தடை செய்யப்பட்டுள்ளது.
இதை அறியாமல், சட்ட விரோதமாக நடந்த ‘கள்’ இறக்கும் போராட்டத்தை சீமான் நடத்தியுள்ளார். ‘கள் இறக்குவோரை’ கைது செய்தால் காவல் நிலையம் உடைத்தெறியப்படும் என அரிவாளை தூக்கி காட்டுகிறார், சீமான். சட்ட விதிமுறைகளை மீறி ‘கள்’ இறக்கியதுடன், அரிவாளை தூக்கிக்காட்டி காவல்துறைக்கு கொலை எச்சரிக்கை செய்த சீமான் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது 24 மணி நேரத்திற்குள் உரிய வழக்கு பதிந்து, கைது செய்ய வேண்டும். இல்லையேல், போராட்டம் வெடிக்கும். இவ்வாறு கூறியுள்ளார்.