அண்ணாநகர்: முகப்பேர் பிரதான சாலையில், 7வது மண்டல குடிநீர் வாரிய அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகம் முன்பு, தனியார் வேன்கள் வரிசையாக நிறுத்தப்படுவதால், குடிநீர் வாரிய அலுவலகத்துக்கு வரும் பொதுமக்கள் சிரமப்பட்டு வந்தனர். மேலும், காலை, மாலை நேரங்களில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டு வந்தது.
இதுபற்றி அறிந்த திருமங்கலம் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பரமானந்தம் மற்றும் உதவி ஆய்வாளர் ராஜா தலைமையிலான போக்குவரத்து போலீசார் நேற்று சம்பவ இடத்திற்கு வந்து, குடிநீர வாரிய அலுவலகம் முன்பு ஆக்கிரமித்து நிறுத்தப்பட்ட தனியார் டிராவல்ஸ் வாகனங்களை அதிரடியாக அகற்றினர். மேலும், இந்த இடத்தில் மீண்டும் வாகனங்களை நிறுத்தினால், அபராதம் விதிக்கப்படும், என வாகனங்களின் உரிமையாளர்களை எச்சரித்தனர்.