சென்னை: நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டிய கட்டடங்களுக்கு குடிநீர், மின் இணைப்பு தந்தது எப்படி? என மின்சார வாரியம், தாம்பரம் மாநகராட்சி விளக்கமளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆக்கிரமிப்பாளர்களுடன் அரசு அதிகாரிகளும் இணைந்து செயல்படுவதாக சந்தேகம் எழுகிறது என்றும் கூறியுள்ளது. நன்மங்கலம் ஏரியை ஆக்கிரமித்து கட்டிய அடுக்குமாடி குடியிருப்புகளின் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி தாக்கல் செய்த வழக்கில் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டிய கட்டடங்களுக்கு குடிநீர், மின் இணைப்பு தந்தது எப்படி? ஐகோர்ட்
0