Thursday, April 25, 2024
Home » பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் பாதுகாப்பான குடிநீர், சுகாதாரம், தெருவிளக்கு உள்ளதை 100% உறுதி செய்ய வேண்டும்

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் பாதுகாப்பான குடிநீர், சுகாதாரம், தெருவிளக்கு உள்ளதை 100% உறுதி செய்ய வேண்டும்

by Lakshmipathi

*ஊராட்சித் தலைவர்களுடனான ஆய்வுக்கூட்டத்தில் கலெக்டர் உத்தரவு

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி களிலும்பாதுகாப்பான குடிநீர், சுகாதாரம், தெரு விளக்குகள் நல்ல நிலை யில் உள்ளதை 100 சதவீ தம் உறுதி செய்ய வேண் டும் – இன்னும் 3 நாட்களு க்குள் அரசின் பல்வேறு திட்டங்கள் மூலம் ஊராட் சிகளுக்கு அறிவிக்கப் பட்டுள்ள திட்டப்பணிகளை தொடங்கவேண்டும்.பெரம்பலூரில் நடந்த ஊராட்சித் தலைவர்களுட னான ஆய்வுக் கூட்டத்தில் பெரம்பலூர்மாவட்ட கலெக் டர் கற்பகம் உத்தரவிட்டார்.

பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் செயல் படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் கிராம ஊராட்சி களில் ஏற்படுத்தப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து ஊராட்சி மன்ற தலைவர்களுடனான ஆய்வுக் கூட்டம் நேற்று (13ம்தேதி) நடைபெற்றது.கூட்டத்தில், மாவட்டக் கலெக்டர் கற்பகம் தலை மை வகித்து, திட்டப்பணி களை ஆய்வுசெய்து பேசிய தாவது :

அனைத்து கிராம ஊராட்சி களிலும், பொதுமக்களுக்கு தினந்தோறும் பாதுகாப் பான குடிநீர் வழங்கப்பட வேண்டும். கோடைக் காலங்களில் குடிநீர் பற்றாக்குறைகள் ஏற்படாத வாறு நீர்வள ஆதாரங் களை புனரமைத்து தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும். பல் வேறு திட்டங்களின் கீழ் பொது கிணறுகள் அமைத்தல், ஆழ்துளை கிணறுகள் அமைத்தல உள்ளிட்ட திட்டங்கள் அறி விக்கப்பட்டும் இன்னும் பணிகள் தொடங்காத நிலை உள்ளது. இது மிக வும் வருத்தத்திற்குரியது.

இன்னும் 3 நாட்களுக்குள் அரசின் பல்வேறு திட்டங் கள் மூலம்ஊராட்சிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள திட்டப் பணிகளை தொடங்க வேண்டும்.வீட்டுஇணைப்பு குழாய் வழங்கும் பணி களை விரைவாக முடிக்க வேண்டும். திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் தூய்மை காவலர்க ளால் சேகரம்செய்யப்படும் குப்பைகளை, மேலாண் மை செய்ய ஊராட்சிக்கு தலா இரண்டு ஏக்கர் பரப் பளவு இடங்களை தேர்வு செய்து குப்பைகளை தரம் பிரிக்கும் கொட்டகைகள் அமைத்துக் கொடுக்கப் பட் டுள்ளது.

எனவே அனைத்து ஊராட் சிகளிலும் முறையாக குப் பைகள் சேகரம் செய்பவர், சேகரம் செய்யப்பட்டு மக் கும் குப்பை மக்காத குப் பைகளாக பிரித்தெடுக்க வேண்டும். தெருக்களில் நீர் ஆதாரங்கள் இருக்கும் இடங்களில் குப்பைகளை கொட்ட கூடாது. திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை திறம்பட செயல்படுத்த வேண்டும். வீடுகள் மற்றும் பொது இடங்களில் உற் பத்தியாகும் கழிவுநீரை நேரடியாக நீர் நிலைகளில் கலப்பதை தவிர்க்கும் பொருட்டு சமுதாய வடிகட்டி (chock pit) பணிகளை விரைந்து முடித்து நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டும்.

கிராமப்புறங்களில் கட்டப் பட்டுள்ள மகளிர் சுகாதார வளாகம் மற்றும் பொது சுகாதார வளாகங்களில் தண்ணீர் வசதி ஏற்படுத்தி பொதுமக்கள் பயன் பாட்டி ற்குக் கொண்டு வர வேண் டும். தனிநபர் இல்லக் கழி ப்பறைகள் பொதுமக்களு க்கு தேவைப்படுமாயின் தகுதியுள்ள நபர்களை அடையாளம் கண்டு வட் டார வளர்ச்சி அலுவலர்கள் மூலம் கருத்துரு சமர்பித்து நிர்வாக அனுமதி பெற்று க்கொள்ள வேண்டும். அனைத்து ஊராட்சிகளி லும் உள்ள அரசுப்பள்ளிக ளில் மாணாக்கர்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்குவதோடு மாணவ, மாணவிகளுக்கான கழிப் பறையில் தண்ணீர் வசதி ஏற்படுத்திட வேண்டும். எந்தப் பள்ளியிலும் குடிநீர் வசதியோ கழிப்பறைக் கான தண்ணீர் வசதியோ இல்லை என்றநிலை இருக் கக்கூடாது.

கிராம ஊராட்சிகளில் உள்ள அனைத்து தெருக்க ளிலும் தெரு விளக்குள் 100 சதவீதம் எரிவதை உறுதி செய்வதோடு, அனைத்து துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விளக்குகள் எரிவதை ஆய்வு செய்ய வேண்டும். 15வது நிதிக் குழு மானியத்தின் கீழ் எடுக்கப்பட்டு நிலுவையில் உள்ள பணிகளை பிப்ரவரி இறுதிக்குள் முடிக்கப்பட வேண்டும். முடிக்கப்பட்ட பணிகளுக்கு நிதியை வழங்கி இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் நிர்வாக அனுமதி பெறப்பட்ட உட் கட்டமைப்பு பணிகளை மற் றும் அனைத்துகிராம அண் ணா மறுமலர்ச்சித் திட்டத் தின் கீழ் எடுக்கப்பட்ட நிலு வை பணிகளை வருகிற 29ம்தேதிக்குள் விரைந்து முடிக்க வேண்டும் எனத்தெரிவித்தார். இந்த ஆய்வு க் கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லலிதா, ஊராட்சிகள் உதவி இயக் குநர் வீரமலை, தூய்மை பாரத இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜபூபதி, அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர் கள், பொறியாளர்கள், மற் றும் பணி மேற்பார்வையா ளர்கள் கலந்து கொண்டனர்.

You may also like

Leave a Comment

18 + two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi