தர்மபுரி: தர்மபுரியில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக ஆளுநர் மாளிகை முன்பு, பெட்ரோல் குண்டு வீச்சு நடந்துள்ளது கண்டனத்துக்குரியது. தேர்தல் நெருங்கும் சமயத்தில், யாருடன் கூட்டணி என முடிவு எடுப்போம். நீட் தேர்வு இந்தியா முழுவதும் உள்ளது. நீட் தேர்வை ஒழிக்க முடியாது. எந்த தேர்வானாலும் தமிழக மாணவர்கள் எதிர்கொள்வார்கள். திராவிடம் இல்லை என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. திராவிடம் நான்கு மாநிலங்களுக்கும் பொதுவானது. மக்கள் ஒற்றுமையாகத் தான் உள்ளனர். ஜாதி வாரி கணக்கெடுப்பு, மதத்தை பற்றி பேசுவதால், மக்களுக்கு எந்த பலனும் இல்லை. அரசியலில் வெற்றி தோல்வி என்பது சகஜம். தேமுதிகவின் வாக்கு வங்கி உயரும். மீண்டும் தேமுதிக எழுச்சி பெறும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.