சென்னை: சென்னையில் சர்வதேச இயந்திர கருவிகள் கண்காட்சியை தொடங்கி வைத்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்; கடந்த ஆண்டு 435 நிறுவனங்கள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் இவ்வாண்டு 468 நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. திராவிட மாடல் ஆட்சியில் தொழில்துறை மாபெரும் வளர்ச்சி அடைந்துள்ளது. பதிவு செய்யப்பட்ட சிறு, குறு தொழில்கள் உள்ள மாநிலங்களில் தமிழ்நாடு 3ம் இடம். இந்தியாவின் மொத்த உற்பத்தி மதிப்பில் தமிழ்நாட்டின் பங்கு 11.9%ஆக உள்ளது. ஜவுளி இயந்திரங்கள், மின்னணு பொருட்கள் உற்பத்தியில் 2வது இடத்தில் தமிழ்நாடு உள்ளது. இந்தியாவில் உள்ள 14.90 லட்சம் பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்களில் 6.30 லட்சம் பேர் பெண்கள். தமிழ்நாட்டில் தொழில் | முனைவோரில் பெண்களின் பங்கு 30 விழுக்காடு. 2021ம் ஆண்டு முதல் ஏற்றுமதிகளை அதிகரித்து வரும் ஒரே மாநிலம் தமிழ்நாடு; தொழில் வளர்ச்சி, தொழில் துறையினர், தொழிலாளர் நலனுக்கு என்னவெல்லாம் தேவை என உன்னிப்பாக கவனித்து செயல்படுகிறோம் என்று கூறினார்.
திராவிட மாடல் ஆட்சியில் தொழில்துறை மாபெரும் வளர்ச்சி அடைந்துள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின்
0