சென்னை: ஆபரேஷனும் வெற்றி; நோயாளியும் பிழைத்தார்; திராவிடம் வென்றது; சனாதனம் தோற்றது என்று தி.க. தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமையை உரித்தாக்கிய உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்று கி.வீரமணி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், 53 ஆண்டு சமூக போராட்டமான ஜாதி, தீண்டாமை ஒழிப்பு போராட்ட களத்தில் வெற்றி வாகை சூடியது வரலாற்றின் வைரம். நியாய தராசை சரியாக பிடித்த நீதிபதிகளும் மக்களின் பாராட்டுக்கு உரியவர்கள்; இது ஒரு திருப்புமுனை தீர்ப்பு.
திருப்புமுனை தீர்ப்புக்கு நமது முதல் அமைச்சரும், அவரது அரசும் இதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. தொடரட்டும் ஒப்பற்ற முதலமைச்சரின் சரித்திர சாதனைகள்; எஞ்சிய நியமனங்கள் தொடரட்டும். இடையில்லாமல் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் வகையில் அர்ச்சகர் பயிற்சியும் தொடரட்டும். இதன் மூலம் பெரியார் வென்றார், அண்ணா வென்றார், கலைஞர் வென்றார், ஸ்டாலின் வென்றார், மக்கள் வென்றனர் என்று குறிப்பிட்டுள்ளார்.