நாகை: நாகையில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தினர். கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தினர். இரு படகுகளில் வந்த கடற்கொள்ளையர்கள் மீன்கள், வலைகள் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்துச் சென்றனர்.