சென்னை: திருப்பூர் மாவட்டம், அவினாசி கைகாட்டிப்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாதுரை மகள் ரிதன்யா (27). இவருக்கும் கவின்குமார் என்பவருக்கும் 3 மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. வரதட்சணையாக 300 பவுன் கொடுத்ததாக சொல்லப்பட்ட நிலையில் 500 பவுன் வேண்டும் என கணவர் கவின்குமாரும், குடும்பத்தினரும் ரிதன்யாவை கொடுமை செய்து வந்ததாக சொல்லப்படுகிறது. அதேபோல், திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே திருமணமான 4வது நாளிலே லோகேஸ்வரி (24) என்ற புதுமணப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி மிகவும் வேதனையாக உள்ளது. எனவே வரதட்சணை கொடுமை செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு கடுமையான தண்டனையை இந்த நீதி அரசர்களும், அரசாங்கமும் பெற்று தரவேண்டும். வரதட்சணை கொடுமை செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு உச்ச பட்ச தண்டனையான ஆயுள் தண்டனை வழங்க வேண்டும். இனி இதுபோன்ற வரதட்சணை கொடுமை செய்து மரணங்கள் எங்கும் நடக்காத வண்ணம் இந்த அரசு பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வரதட்சணை கொடுமை மரணங்களை அரசு தடுக்க பிரேமலதா வலியுறுத்தல்
0