மேட்டூர்: மருமகள் அளித்த வரதட்சணை புகார் தொடர்பாக மேட்டூர் பா.ம.க. எம்.எல்.ஏ.சதாசிவத்திடம் மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஐகோர்ட் உத்தரவுப்படி சூரமங்கலம் மகளிர் காவல் நிலையத்தில் எம்.எல்.ஏ. சதாசிவம் தனது குடும்பத்துடன் ஆஜரானார். மருமகள் அளித்த வரதட்சணை புகாரில் பாமக எம்.எல்.ஏ. சதாசிவம், அவரது மனைவி, மகன், மகள் மீது 6 பிரிவுகளில் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில் முன்ஜாமின் கேட்டு உயர்நீதிமன்றத்தில் சதாசிவம் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி, சதாசிவம், அவரது குடும்பத்தினர் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். உயர்நீதிமன்ற உத்தரவுப்படி தனது குடும்பத்தினருடன் எம்.எல்.ஏ. சதாசிவம் விசாரணைக்கு ஆஜராகி உள்ளார்.