கொழும்பு: ஊக்கமருந்து சோதனையில் பிடிபட்ட இலங்கை அணி விக்கெட் கீப்பர்/பேட்ஸ்மேன் நிரோஷன் டிக்வெல்லா (31), அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் காலவரையின்றி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். சமீபத்தில் நடந்த லங்கா பிரிமியர் லீக் தொடரின்போது டிக்வெல்லாவிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில், அவர் ஊக்கமருந்து உபயோகித்தது உறுதி செய்யப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
இலங்கை அணிக்காக டிக்வெல்லா 54 டெஸ்ட், 55 ஒருநாள் மற்றும் 28 டி20ல் விளையாடி உள்ளார். சர்ச்சை நாயகனான இவர், 2021ல் கொரோனா கட்டுப்பாடுகளை மீறியதற்காக குசால் மெண்டிஸ், தனுஷ்கா குணதிலகே ஆகியோருடன் சேர்த்து சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.