டொமினிகன் குடியரசு தலைநகருக்கு அருகே ஏற்பட்ட வெடி விபத்தில் 12 பேர் பலியான நிலையில் மாயமான 11 பேரை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. திங்கட்கிழமையன்று சான் கிறிஸ்டோபல் நகரில் சந்தை பகுதியில் செயல்பட்டு வரும் பேக்கரி ஒன்றில் வெடி விபத்து ஏற்பட்டு அருகிலிருந்த ஹார்டுவேர் மற்றும் பார்னிச்சர் கடைகளுக்கும் தீ பரவியது. இதில் 4 மாத குழந்தை உட்பட 12 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், 11 பேரை காணவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.















