மும்பை: விஜய் ஹசாரே கோப்பை, சையத் முஷ்டாக் அலி கோப்பை, பெண்கள் மற்றும் ஜூனியர் கிரிக்கெட் போட்டிகள் போன்ற போட்டிகளில் விளையாடும் வீரர்களுக்கு கிரிக்கெட் பரிசுத் தொகையை வழங்கும் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது; “எங்கள் உள்நாட்டு கிரிக்கெட் திட்டத்தின் கீழ் அனைத்து மகளிர் மற்றும் ஜூனியர் கிரிக்கெட் போட்டிகளிலும் ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் பரிசுத் தொகையை அறிமுகப்படுத்துகிறோம். மேலும், மூத்த ஆண்களுக்கான விஜய் ஹசாரே மற்றும் சையத் முஷ்டாக் அலி போட்டிகளில் ஆட்ட நாயகனுக்கு பரிசுத் தொகை வழங்கப்படும்.
இந்த முன்முயற்சியானது உள்நாட்டுச் சுற்றுவட்டத்தில் சிறந்து விளங்குபவர்களை அங்கீகரித்து வெகுமதி அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த முயற்சியில் அபெக்ஸ் கவுன்சில் அவர்களின் அசைக்க முடியாத ஆதரவிற்கு மனமார்ந்த நன்றி. ஒன்றாக, நாங்கள் எங்கள் கிரிக்கெட் வீரர்களுக்கு அதிக பலனளிக்கும் சூழலை வளர்த்து வருகிறோம்” என தெரிவித்துள்ளார்.