மதுரை: தமிழ்நாட்டில் அதிகரித்துவரும் நாய் தொல்லைகளை கட்டுப்படுத்த உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தொடரப்பட்டு இருந்தது. ஒன்றிய சுகாதாரத்துறை, விலங்குகள் நலத்துறை, தமிழ்நாடு அரசு பதில் அளிக்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. சென்னை ஐகோர்ட் மற்றும் மதுரை கிளையிலும் கூட நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. விலங்குகள் பாதுகாவலர் என்ற போர்வையில் ஒரு தரப்பினர் நடவடிக்கை எடுக்கக்கூடாது என கூறிவருகின்றனர் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.