சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் அண்மைக்காலங்களில் பதிவு செய்யப்படும் சொத்து மற்றும் பிற ஆவணங்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது. ஆவண எழுத்தர் உரிமத்திற்காக காத்திருப்பவர்களின் குறைந்தபட்ச வயது 40 ஆகும். அவர்களில் பலர் 55 வயதைக் கடந்து விட்டனர். இத்தகைய சூழலில் அதிகபட்சம் வயது 33 மற்றும் 35 என நிர்ணயிக்கப்பட்டிருப்பதன் மூலம், ஆவண எழுத்தர் உரிமத்திற்காக காத்திருக்கும் எவருக்கும் பயன் கிடைக்காது. எனவே, அனைத்துத் தரப்பினரின் நன்மை கருதி தமிழ்நாட்டில் ஆவண எழுத்தர் உரிமத்திற்கான தேர்வை தமிழக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும்; அதுமட்டுமின்றி, ஆவண எழுத்தர் உரிமத் தேர்வுக்கான வயது வரம்பை நீக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.