சென்னை : மருத்துவர்களின் பாதுகாப்பு தொடர்பாக மாநில தலைமைச் செயலர்களுடன் ஒன்றிய உள்துறை செயலர் ஆலோசனை நடத்தி வருகிறார். மருத்துவர்களின் பாதுகாப்பு குறித்த ஆலோசனையில் தலைமைச் செயலாளர்களுடன் டிஜிபிக்களும் பங்கேற்றுள்ளனர். சுகாதாரப் பணியாளர்களின் பாதுகாப்பை மேம்படுத்த எடுத்த நடவடிக்கைகள் குறித்து மாநில அரசுகள் ஆலோசனையின் போது விளக்கம் அளித்து வருகின்றன.