டெல்லி: மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் தாக்கப்பட்டால் 6 மணி நேரத்திற்குள் FIR பதிவு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 6 மணி நேரத்திற்குள் FIR பதிவு செய்வதற்கு மருத்துவ நிறுவனத் தலைவரே பொறுப்பேற்க வேண்டும் என மருத்துவ நிறுவனங்களுக்கு சுகாதாரத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. மருத்துவ பணியாளர்கள் மீது தொடர் தாக்குதல்கள் நிகழ்வதை அடுத்து மத்திய சுகாதாரத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.