புதுடெல்லி: கொல்கத்தா மருத்துவக் கல்லூரியில், பயிற்சி பெண் மருத்துவர் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட நிலையில், ஒன்றிய சுகாதார துறையின் இயக்குனர் ஜெனரல் அதுல் கோயல், அனைத்து மருத்துவ கல்லூரிகளின் முதல்வர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில்,‘‘பணியில் இருக்கும் டாக்டர்கள் உள்ளிட்ட சுகாதார பணியாளர்களை யாராவது தாக்கினால் சம்பவம் நடந்த 6 மணி நேரத்துக்குள் போலீசில் எப்ஐஆர் பதிவு செய்ய வேண்டியது சம்மந்தப்பட்ட நிறுவனத்தின் தலைமை அதிகாரியின் பொறுப்பாகும்’’ என குறிப்பிட்டுள்ளார்.