சென்னை: உயிர்காக்கும் மருத்துவர்களின் பாதுகாப்பை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கோரிக்கை வலியுறுத்தியுள்ளார். கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது. அரசு, தனியார் மருத்துவமனைகள் உரிய பாதுகாப்புடன் இயங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.