சென்னை: அரசு மருத்துவர்களுக்கு 2 மணி நேரம் கூடுதலாக பணியாற்ற அனுப்பப்பட்ட சுற்றறிக்கையை திரும்ப பெற வேண்டும் என்று. ஜனநாயக தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் ஜனநாயக தமிழ்நாடு அரசு மருத்துவர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சங்கத்தின் மாநில தலைவர் பால கிருஷ்ணன் ஏற்கனவே 9 மணி முதல் 2 மணி வரை மருத்துவமனையிலும் 4 மணி வரை மருத்துவ கல்லூரிகளிலும் பணியாற்ற வேண்டும் என்ற அரசாணை இருப்பதை சுட்டிக்காட்டினார். எனவே இதனை திரும்ப பெற வேண்டும் என்று பாலகிரிஷ்ணன் கேட்டுக்கொண்டுள்ளார். ஊதிய உயர்வுக்கான பேச்சுவார்த்தையை தொடங்கவும் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.