சென்னை: டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. 90 பணியிடங்களுக்காக ஜூலை 13-ம் தேதி நடத்தப்பட்ட முதல் நிலை தேர்வை 1,59,887 பேர் எழுதினர்; பிரதான தேர்வுக்கு தகுதி பெற்றவர்கள் 6-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை ரூ.200 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குரூப்-1 முதல்நிலை தேர்வு நடந்த 50 நாட்களில் முடிவு வெளியிடப்பட்டுள்ளது.