சென்னை: திமுக அணிகளின் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி செயலாளர் தயாநிதி மாறன் எம்பி வெளியிட்ட அறிவிப்பு: விழுப்புரம் வடக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளராக நியமிக்கப்பட்ட ஜி.ரிஸ்வானை அப்பொறுப்பில் இருந்து விடுவித்து, அவருக்கு பதிலாக ஷேக்வாகித் மாவட்ட துணை அமைப்பாளராக நியமிக்கப்படுகிறார். ஏற்கனவே நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் இவருடன் இணைந்து பணியாற்றிட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
திமுக தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வெளியிட்ட அறிவிப்பு: விழுப்புரம் வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்ட எம்.மொக்தியார் அலி அப்பொறுப்பில் இருந்து விடுவித்து, அவருக்கு பதிலாக ரோமியன் விழுப்புரம் வடக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்படுகிறார். ஏற்கனவே நியமிக்கப்பட்ட மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் இவருடன் இணைந்து பணியாற்றிட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.