சென்னை: திமுக ஆட்சியை ஆன்மிக பெரியோர்கள், பக்தர்கள் அனைவரும் பாராட்டி வருகின்றனர் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆலய வழிபாடுகளில் தமிழ் மொழி முதன்மை பெற வேண்டும். பழனி, திருச்செந்தூர், திருத்தணி உள்ளிட்ட 7 கோயில்களில் பெருந்திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 68 முருகன் கோயில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.