சென்னை: திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிவிப்பு: திமுக இளைஞர் அணியின் சென்னை கிழக்கு மாவட்ட அமைப்பாளர் டி.லோகேஷ் மற்றும் மதுரை வடக்கு மாவட்ட அமைப்பாளர் கே.ஆர்.அழகுபாண்டி ஆகியோர் அந்த பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.
சென்னை கிழக்கு மாவட்ட அமைப்பாளராக வில்லிவாக்கத்தை சேர்ந்த வழக்கறிஞர் வானவில் விஜய் நியமிக்கப்படுகிறார். மதுரை வடக்கு மாவட்ட அமைப்பாளராக எம்.இளங்கோநியமிக்கப்படுகிறார். ஏற்கனவே அறிவிக்கப்பட்ட இளைஞர் அணி நிர்வாகிகள், இவர்களுடன் இணைந்து பணியாற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.